எழும்பூரில் அக். 2-ம் தேதி வரை ‘தேசி மேளா’ - கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி

‘தேசி மேளா' கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள நகைகளை ஆர்வமுடன் பார்க்கும் சிறுமிகள்.
‘தேசி மேளா' கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள நகைகளை ஆர்வமுடன் பார்க்கும் சிறுமிகள்.
Updated on
1 min read

சென்னை: தனித்துவமான கலை, கைவினை, ஜவுளி,நகை, ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 'தேசி மேளா' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை நடத்திவரும் கிராவிட்டி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் 'தேசி மேளா' கடந்த செப். 23-ம் தேதி முதல் நடைபெறுகிறது. வரும் அக்.2-ம் தேதி வரை கண்காட்சியைக் கண்டு தேவையான பொருட்களை வாங்கமுடியும். இங்கு 100 ஸ்டால்களில் வசீகரிக்கும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், மயக்கும் நகைகள், நம்ப முடியாத ஓவியங்கள், பித்தளையால் ஆன சிலைகள், ஃபர்னிச்சர்கள் விற்பனைக்கு உள்ளன.

மேலும் பல்வகை ராஜஸ்தான் ஜவுளிகள், கைத்தறி படுக்கை விரிப்புகள், போர்வைகள், சந்தேரி சில்க் புடவைகள், செட்டிநாடு புடவைகள், பெங்கால் புடவைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகம் உள்ளன. இவை மட்டுமின்றி தஞ்சாவூர் ஓவியங்கள், ஒடிசா பட்டசித்திரா ஓவியங்கள், நகைகள், மரச்சிற்பங்கள், மர ஃபர்னிச்சர்கள் போன்றவற்றையும் வாங்க முடியும். தினமும் காலை 10 முதல் இரவு 8:30 மணி வரை கண்காட்சியைக் காணலாம். போதுமான வாகன நிறுத்துமிடம், டெபிட், கிரெடிட் கார்டுகளை பெறும் வசதி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in