

இன்டர்நேஷனல் தமிழ் ஃபிலிம் அகாடெமி மற்றும் செவன்த் சேனல் இணைந்து நடத்தும் 14-வது தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா நாளை சென்னையில் தொடங்குகிறது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட தொடக்கவிழாவில் ஜெர்மனியின் “ஆர்ட் கேர்ள்ஸ்” திரைப்படம் திரையிடப்படும். இத்திரைப்படத்தின் இயக்கு நரும் ஜெர்மனியின் ஹம்பர்க் அகாடெமி ஃபிலிம் ஆர்ட்ஸ் பல்கலைகழக விரிவுரையாள ரான டாக்டர் ராபர்ட் பிரம்ப்கெம்ப் நாளை (புதன்கிழமை) சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார்.
இத்திரைப்பட விழாவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், ஸ்லொவியா, பிரேசில், எகிப்து மற்றும் பலநாட்டு திரைப் படங்கள் திரையிடப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் திரைப் படங்களுக்கு கிரிஸ்டல் விருதும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
துவக்கவிழா திரைப்படம் முடிந்தவுடன் ரஷ்ய கலாச்சார மையத்தில் 12.30 மணியிலிருந்து மற்ற திரைப்படங்கள் திரையிடப்படும்.