

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2017-ம் ஆண்டுக்கான விடுமுறை தின பட்டியலை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆர்.சக்தி வேல் நேற்று வெளியிட்டார்.
தொடர் விடுமுறையைப் பொறுத்தவரை, மே 1 முதல் 31-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒருசில பண்டிகைகளை முன்னிட் டும் தொடர் விடுமுறைகள் விடப் படுகின்றன. ஜனவரி 13 முதல் 16 வரை பொங்கல் பண்டிகைக்காக விடுமுறை விடப்படுகிறது. செப் டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை தசரா விடுமுறை.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ம் தேதி புதன்கிழமை கொண் டாடப்பட உள்ளது. இதற்காக அக்டோபர் 16-ம் தேதி திங்கள் முதல் 19-ம் தேதி வியாழன் வரை 4 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 14, 15 சனி, ஞாயிறு விடு முறையையும் சேர்த்தால் தீபாவளி பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை. டிசம்பர் 23 முதல் 31 வரை கிறிஸ்துமஸ் விடுமுறை.
இவை தவிர, ஜனவரி 26 - குடியரசு தினம், மார்ச் 29 முதல் 31 வரை - தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை, ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டுப் பிறப்பு, மே 1 தொழிலாளர் தினம், ஜூன் 26 - ரம்ஜான், ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 25 - விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 29 - ஆயுத பூஜை, அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, டிசம்பர் 1 - மிலாடி நபி ஆகிய நாட்களும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து சனி, ஞாயிறும் விடுமுறை. 2017- ல் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, பக்ரீத், விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகள் சனி, ஞாயிறுகளில் வருவதால் உயர் நீதிமன்ற விடுமுறை தினங்கள் பட்டியலில் இவை இடம்பெறவில்லை. பிப்ரவரி, ஜூலை, நவம்பர் மாதங்களில் சனி, ஞாயிறு தவிர வேறு விடுமுறைகள் இல்லை.