

திமுக தலைமையால் மாவட்டம் தோறும் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் மனோதங்கராஜ் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாவட்டச் செயலாளராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக எப்.எம்.ராஜரத்தினம், மேற்கு மாவட்ட அவைத்தலைவராக மரிய சிசுகுமார், நாகர்கோவில் மாநகரச் செயலாளராக ஆனந்த், அவைத்தலைவராக பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.