Published : 30 Sep 2022 04:40 AM
Last Updated : 30 Sep 2022 04:40 AM

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்வு

திருச்சி/ கரூர்/ அரியலூர்/ பெரம்பலூர்

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் விவரம்: திருச்சி மத்திய மாவட்டம்: செயலாளர்-க.வைரமணி. அவைத்தலைவர்-பேரூர். ம.தர்மலிங்கம். துணைச் செயலாளர்கள்- தி.முத்துசெல்வம், மு.கருணாநிதி, விஜயாஜெயராஜ். பொருளாளர்-எஸ்.துரைராஜ். தலைமை செயற்குழு உறுப்பினர்கள்-கே.என்.நேரு,

திருச்சி என்.சிவா, பா.பரணிகுமார், மொ.பழனியாண்டி, காஜாமலை விஜய். பொதுக்குழு உறுப்பினர்கள்- -கா.செவந்திலிங்கம், எஸ்.செல்வம், மு.கருணாநிதி, கே.தர்மராஜ், சே.விமலநாதன், ச.சலிமாபேகம்.

திருச்சி தெற்கு மாவட்டம்: செயலாளர்-அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அவைத்தலைவர் பண்ணப்பட்டி என்.கோவிந்தராஜன். துணைச் செயலாளர்கள் அ.த.த.செங்குட்டுவன், ரா.மூக்கன், லீலாவேலு. பொருளாளர் ரா.குணசேகரன்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள்-கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், பி.எம்.சபியுல்லா. பொதுக்குழு உறுப்பினர்கள்- கே.சண்முகம், கே.கே.கே.கார்த்திக், வீ.தனசேகரன், உ.ராஜேஸ்வரன், கே.சி.பழனிச்சாமி, ரா.மணிமேகலை.

திருச்சி வடக்கு மாவட்டம்: செயலாளர்-ந.தியாகராஜன், அவைத்தலைவர்-எஸ்.ஏ.அம்பிகாபதி, துணைச் செயலாளர்கள்- கனகராஜீ, மா.மயில்வாகனன், க.பானுமதி. பொருளாளர்-த.ராஜேந்திரன்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள்-என்.எஸ்.கருணைராஜா, எம்.தமிழ்மாறன், எம்.கணேசன். பொதுக்குழு உறுப்பினர்கள்-வி.ஆனந்தன்,ஆர்.தர், கு.கிட்டப்பா, டி.பூபதி, க.சந்திரசேகரன், ம.கவிதா.

கரூர் மாவட்டம்: மாவட்டச் செயலாளர்- அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, அவைத்தலைவர்-டி.ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள்-எம்.எஸ்.கே.கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு, வி.எஸ்.மகேஸ்வரி, பொருளாளர்-பி.வி.பாரத், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்- சுப.ராஜகோபால், சிவகாமசுந்தரி உட்பட 8 பேர்.

அரியலூர் மாவட்டம்: மாவட்டச் செயலாளர்- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அவைத் தலைவர்- சி.மாணிக்கம், துணைச் செயலாளர்கள்-சி.சந்திரசேகரன், மு.கணேசன், பா.லதா, பொருளாளர்-கு.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்-சுபா.சந்திரசேகர், பி.பாலசுப்ரமணியன்.

பெரம்பலூர் மாவட்டம்: மாவட்டச் செயலாளர்-குன்னம் சி.ராஜேந்திரன், அவைத் தலைவர்-அ.நடராஜன், துணைச் செயலாளர்கள்- சி.பாஸ்கர், ச.சம்பத்,நூருல்ஹிதா, பொருளாளர்-செ.ரவிச்சந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்-மு.அட்சய கோபால், என்.ராஜேந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x