

எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள் ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் (சிறப்பு அனுமதி திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் உட்பட) தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது, பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.