

உரிகம் காப்புக் காட்டில் 2 குட்டிகளுடன் 7 யானைகள் முகாமிட்டுள் ளன. எனவே, இப்பகுதி கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
உரிகம் காப்புக்காட்டில் 2 குட்டியுடன் 7 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை இரவு நேரங்களில் காப்புக்காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமப்பகுதிகளில் சுற்றி வருகின்றன.
நேற்று காலை உரிகம்-அத்திநத்தம் சாலையை யானைகள் கடந்து சென்றன. யானைகள் சாலையை கடக்கும் வரையில் அச்சாலையில் வாகன போக்குவரத்தை தடுத்து பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும், வனப்பகுதியில் யானையின் நடமட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
‘உரிகம் காப்புக்காட்டை சுற்றியுள்ள மலைக் கிராமங்களான அத்திநத்தம், போடூர், ஜோடுகரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விளை நிலங்களில் காவல் பணி, வனப்பகுதியில் விறகு சேகரித்தல், கால்நடை மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளுக்கு இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்’ என வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.