மத்திய அரசைக் கண்டித்து கடை வீதிகள், வணிக நிறுவனங்களில் டிசம்பர் மாதம் முழுவதும் கருப்புக் கொடி: வணிகர் சங்கப் பேரவை அறிவிப்பு

மத்திய அரசைக் கண்டித்து கடை வீதிகள், வணிக நிறுவனங்களில் டிசம்பர் மாதம் முழுவதும் கருப்புக் கொடி: வணிகர் சங்கப் பேரவை அறிவிப்பு
Updated on
1 min read

மத்திய அரசைக் கண்டித்து கடை வீதிகள், வணிக நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என்றும் அதைத் தொடர்ந்து, ஜனவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சுதேசி கொள்கையை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறினார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளையன், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். கள்ள ரூபாய் நோட்டு களையும் கறுப்புப் பணத்தையும் இத்தனை நாட்கள் ஒழிக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பணத்தின் மதிப்பை நீக்கம் செய்தது மத்திய அரசின் அதிகார அராஜக நடவடிக்கை. இந்த நடவடிக்கை சில்லறை வணிகத்தைச் சீர்குலைத்துள்ளது.

மக்கள் கையில் பணம் வைத்துக் கொள்ளாமல், பண அட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு உதவு வதற்காகவும், உள்நாட்டு சில்லறை வணிகத்தை அழிப்பதற்காகவும் மோடி அரசு எடுத்துள்ள அந்நிய ஆதிக்கத்தைப் புகுத்தும் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

எனவே, மத்திய அரசைக் கண் டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை சார்பில் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு தமிழகத்தின் முக்கிய கடைவீதிகள், வணிக நிறுவனங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்படும். இதில், ஜாதி, கட்சி பாகுபாடு இன்றி வணிகர்கள் பங்கேற்க வேண்டும்.

மேலும், வெளிநாட்டுப் பொருட் களை மக்கள் புறக்கணிக்க வலியு றுத்தியும், உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட பொருட்களையே வணிகர்கள் விற்பனை செய்ய வலியுறுத்தியும் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் ஜனவரி 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள் ளப்படும் என்றார். முன்னதாக, 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட் டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in