

மயிலாப்பூர் பகுதியில் சாலையோரங் களில் வைத்து சுகாதாரமற்ற முறையில் உணவுப் பண்டங்களை சமைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சாலையோர வியாபாரிகளை முழுவது மாக அகற்ற அதிகாரிகள் கூட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவர், உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:
மயிலாப்பூர் மற்றும் லஸ்சர்ச் உள் ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடைபாதைகளில் உள்ள உணவகங்களில் நடைபாதைகளில் வைத்தே சுகாதாரமற்ற முறையில் உணவு சமைக்கப்படுகிறது. இதனால் அந்தக் கடைகளில் சாப்பிடும் பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நடைபாதை ஆக்கிரமிப்புகளையும், நடைபாதை வியாபாரிகளையும் முழுமை யாக அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மாநகராட்சி 9-வது மண்டல உதவி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. அதேநேரம், கடந்த ஆகஸ்ட் 3, 22, அக்டோபர் 13, 31 ஆகிய தேதிகளில் 4 முறை அப்பகுதிகளில் திடீர் ரெய்டு நடத்தி ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் அவர்கள் சாலையோரங்களில் சமைத்த உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதே இடங்களில் கடை போடுகின்றனர். நடை பாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த மாநகராட்சியில் தனியாக கமிட்டி அமைக் கப்பட்டுள்ளது. இதுவரை 154 நடை பாதை ஆக்கிரமிப்பு வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடம் ஒதுக்குவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் அவர் கள் வேறு இடங்களுக்கு செல்ல மறுக் கின்றனர்’ என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இதுபோன்ற வழக்குகள் வரும் போதெல்லாம் பிரச்சினைகளும் வருகின் றன. ஒருமுறை நடைபாதை மற்றும் சாலை யோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுவிட்டால், பழைய இடத்தில் வியாபாரம் செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் சாலையோரங்களில் உணவு விற்பனை செய்வதற்கு அனுமதிக்கலாமே தவிர, அங்கேயே சமைக்க கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.
சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டியது அவசியமான ஒன்று. உணவுப் பண்டங்களை தயாரிப்பதற்கு வியாபாரிகள் அதற்கான தனிப்பட்ட உரிமத்தையும், அனுமதியையும் பெற வேண்டும். நடைபாதை, சாலையோர வியாபாரிகளை முழுமையாக அகற்ற ஒருமுறை ரெய்டு நடத்தினால் போதாது. அது நடைமுறையில் சாத்தியமும் கிடையாது. தொடர்ச்சியாக ரெய்டு மற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கூட்டாக எடுத்தால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.
எனவே, மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையரும், 9-வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையரும் தொடர்ந்து அப்பகுதிகளை கண்காணித்து விதிமீறல்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.