அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள், மா.செக்கள் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்
ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அதிமுகவில் உள்ள அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

மனோகரன் (அமைப்புச் செயலாளர்), அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் (அமைப்புச் செயலாளர்), சுப்புரத்தினம் (தேர்தல் பிரிவுச் செயலாளர்), ராஜலட்சுமி (மகளிர் அணிச் செயலாளர்), டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் (மருத்துவ அணிச் செயலாளர்), திருவாலங்காடு பிரவீன் (மாணவர் அணிச் செயலாளர்), இமாக்குலீன் ஷர்மிளி (மகளிர் அணி இணைச் செயலாளர்), முத்துக்குமார் (புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்), அமலன் சாம்ராஜ் பிரபாகர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்), இந்திரா ஈஷ்வர் (மகளிர் அணி துணைச் செயலாளர்).

திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளராக செஞ்சி சேவல் ஏ. ஏழுமலை, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரா துரைபாண்டியன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக மு. சுந்தர்ராஜன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரா கோவிந்தன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக மாரப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக வினோபாஜி, கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக செல்லப்பன், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக பசும்பொன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக சுப்பிரமணியன், திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக வைகை பாலன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in