Published : 04 Nov 2016 09:15 AM
Last Updated : 04 Nov 2016 09:15 AM

சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோ படிப்புக்கு கலந்தாய்வு: சென்னையில் நாளை தொடங்குகிறது

சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில் நாளை (5-ம் தேதி) தொடங்குகிறது.

இது தொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை வெளியிட்ட அறிவிப்பு:

இந்த கல்வியாண்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக் கான முதல் கட்ட ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. தகுதி யான விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசை எண் 2 ஆயிரத்து 830 வரை, கட்- ஆப் மதிப்பெண் 165.50 வரை தனித்தனியாக கலந்தாய்வு தகவல் குறுஞ்செய்தி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், ‘www.tnhealth.org’ என்ற இணைய தளத்தில் தங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, தங்களுக்குரிய தகவல், அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும், விண்ணப்ப தாரர்கள் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில், அவர்களுக்குரிய கலந்தாய்வு நாளில், தங்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் அல்லது தற்சமயம் படித்துவரும் கல்லூரியில் இருந்து பெற்ற ஆளறி சான்றிதழ்களுடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து நவம்பர் 1-ம் தேதிக்கு பின்னர் சென்னையில் மாற்றத் தக்க வகையில்,‘‘Director of Indian Medicine and Homoe opathy,Chennai-106’’ என்ற பெய ரில், ரூ.5 ஆயிரத்துக்கான கேட்பு வரைவோலையுடன் பங்கேற்க வேண்டும்.

தரவரிசை விவரங்களுக்கு சுகாதாரத்துறை இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம். கலந்தாய்வு 5-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல்நாள் காலை சிறப்பு பிரி வைச் சேர்ந்த 106 பேர் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 193.25 வரையும், பிற்பகல் 2 மணிக்கு 193 முதல் 187.50 வரை, தரவரிசையில் 740 பேர் பங்கேற்கலாம்.

6-ம் தேதி காலை 187.25 முதல் 183 வரை, பிற்பகல் 182.75 முதல் 178 வரை என தரவரிசையில் 741முதல் ஆயிரத்து 756 வரை பங்கேற்கலாம். 7-ம் தேதி காலை, 177.75 லிருந்து 172 வரையும், பிற்பகல் 171.75 முதல் 165.50 வரை தரவரிசையில் ஆயிரத்து 757 முதல் 2 ஆயிரத்து 830 பேர் வரை பங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளும், பகல் 12 மணி முதல் 1 மணிக்குள்ளும் வந்துவிட வேண்டும். கலந்தாய்வில் பங் கேற்று கல்லூரியை தேர்வு செய்தவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x