Published : 01 Nov 2016 08:39 AM
Last Updated : 01 Nov 2016 08:39 AM

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு: கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருநாவுக்கரசர் வாழ்த்து

மொழிவாரி மாநிலங்கள் அமைக் கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெறு வதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழிவாரியாக தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தனித்தனி மாநிலங்களாக பிரிந்து 60 ஆண்டுகள் ஆகின்றன.

அப்போது சட்டப்பேரவையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜீவா, ‘‘இந்த அவையில் கன்னடர், தெலுங்கர், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நவம்பர் 1 முதல் தமிழர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

மொழிவழி மாநிலங்கள் பிரிந்த பிறகும் ‘மதராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என மாற்ற காங்கிரஸ் அரசு மறுத்தது. அண்ணா முதல்வரானதும் ‘மதராஸ்’ என்று அழைக் கப்பட்டதை ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டும் தீர்மானம் 1967 ஜூலை 18-ம் தேதி சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறை வேறியது.

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தன் 50-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. இந்த நேரத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து நாளையோடு (நவ. 1) 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த தருணத்தில் தமிழ்நாடு என பெயர் அமைய பாடுபட்ட தலைவர்களை போற்று கிறேன். தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

சென்னை மாகாணத்தில் இருந்து மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு பிரிந்து 60 ஆண்டு கள் நிறைவு பெறுகின்றன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்ப் பகுதி களாக இருந்த பல்வேறு நிலப்பகுதி கள் ஆந்திரம், கர்நாடகம், கேரளத் துடன் இணைக்கப்பட்டன. இதனால் வட பெண்ணை, ஆரணி, பொன்வாணி ஆகிய ஆறுகளையும், பாலாற்றின் பகுதிகளையும் நாம் இழந்துவிட்டோம்.

தமிழக நிலப் பகுதிகளைக் காப்பதற்காக ம.பொ.சி., மார்ஷல் நேசமணி உள்ளிட்டோர் போராடி னார்கள். சென்னை மாநகரை ஆந்திரா, தமிழகத்துக்கு பொது தலைநகராக்கலாம் என நேரு யோசனை தெரிவித்தார். அதனை அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி கடுமையாக எதிர்த்தார். ‘‘வேண்டுமானால் என்னை நீக்கி விட்டு வேறு முதல்வரை தேர்ந் தெடுங்கள்’’ என்றார். ம.பொ.சி.யும் போர்க்குரல் கொடுத்தார். இதனால் சென்னை மாநகர் பாதுகாக்கப்பட்டது.

தமிழகம் இழந்த நிலப்பகுதி களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். ஆனாலும் தமிழர் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழ்நாடு என பெயர் அமைய உயிர் நீத்தவர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரி வித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

இந்தியாவில் மொழிவாரி மாநிலங் கள் பிரிக்கப்பட்டு, இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் 60-ம் ஆண்டு நிறைவு நாளும், 61-ம் ஆண்டு தொடக்க நாளும் கொண்டாடப்படுகிறது. தமிழக மக் களுக்கு பாமக சார்பில் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடிய தலைவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும். தமிழக மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், தமிழகத்தின் வரலாற்றை இளைய தலைமுறை அறிந்துகொள்ளவும் வசதியாக நவம்பர் மாதம் முதல் நாளை தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

காமராஜர், பெரியார், அண்ணா, ஜீவா, நேசமணி, ம.பொ.சி., சங்கரலிங்க னார் போன்ற தலைவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே மொழிவாரி மாநிலங்கள். இந்த இனிய தருணத்தில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x