

மதுரையில் தேர்தல் நடத்தை விதி முறை அமலில் இருக்கும் நிலையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற 3.25 கிலோ தங்கம் மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் நவ.19-ம் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், விதிமீறல்களை தடுப்பதற்கு கண்காணிப்புக் குழு வினர், பறக்கும்படையினர் நியமிக் கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்புக் குழு மேற்பார்வை யாளர் ஜெயபால், உதவி ஆய்வாளர் ஆதிநாராயணன், தலைமைக் காவலர் பார்வதி உள்ளிட்டோர், நேற்று முன் தினம் இரவு மேலூர் அருகில் உள்ள கத்தப்பட்டி சுங்கச்சாவடி மையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டனர்.
அதில், மதுரையில் உள்ள நகைக் கடை உரிமையாளர் சுரேஷ் குமார்(43), அவரது உதவியாளர் தினேஷ்குமார் ஆகியோர் இருந் தனர். காரில், ரூ.19 லட்சத்து 29 ஆயிரம் ரொக்கம், 3.25 கிலோ எடையுள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள் உள்ளிட்ட ஆபரணங்களை வைத் திருந்தனர்.
ஆனால், அவற்றுக்கான ஆவணங் கள் அவர்களிடம் இல்லை. இதை யடுத்து, 3.25 கிலோ நகை, ரூ.19.29 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறி முதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவாவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர், அவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
ஆட்சியர் கூறும்போது, “திருப் பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியது முதல் தற்போது வரை பல் வேறு இடங்களில் உரிய ஆவணங் களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.29 லட்சம் ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.