

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். காந்தி பிறந்த நாளில் அணிவகுப்பு நடத்தப்போவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையில் அக். 2-ம் தேதி மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறவுள்ளது.