சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்: சவுமியா அன்புமணி வலியுறுத்தல்

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட்டு மக்கள் பங்கேற்புடன் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம் நேற்று வழங்கினார். படம் : ம.பிரபு
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட்டு மக்கள் பங்கேற்புடன் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம் நேற்று வழங்கினார். படம் : ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவுஅறிக்கை மாநகராட்சி இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 26-ம் தேதி வரை (நேற்று) பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவை நேற்று சந்தித்து வரைவு செயல் திட்டம் குறித்த தங்களது அமைப்பின் கருத்துகளை அறிக்கையாகக் கொடுத்தார். அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர், சவுமியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் காலநிலை மாற்ற வரைவு அறிக்கையை வெளியிட்டு,கருத்து தெரிவிக்க இன்று (நேற்று)இறுதி நாள் என்று கூறியிருந்தனர். அதை நீட்டிக்கவும், தமிழில் வெளியிடவும் மேயரிடம் கோரிக்கை விடுத்தோம். சென்னைக்கு வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் 66 திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அதுபற்றி விரிவாகவிளக்கப்படவில்லை.

தமிழகத்தின் மக்கள் தொகை 7.5 கோடி.சென்னையில் மட்டும் ஒரு கோடிபேர் வசிக்கின்றனர். சுற்றுச்சூழலைச் சீரமைக்க விரிவானதிட்டம் தேவை. அவசர கதியில் அதைச் செயல்படுத்த முடியாது. நீடித்த செயல் திட்டமாக அது இருக்க வேண்டும். செஸ் ஒலிம்பியாட்டுக்கு வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள்போல, காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளும் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் மக்கள் பங்களிப்பு அவசியம் வேண்டும் எனவே, மக்களிடம் கருத்துகளைக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in