Published : 27 Sep 2022 06:59 AM
Last Updated : 27 Sep 2022 06:59 AM

பொறியியல் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு: விருப்பப் பதிவுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்சுற்றில் பங்கேற்ற மாணவர்களில் 10,340 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டன.

தொடர்ந்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு செப். 25-ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் இன்று (செப்.27) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்கள் துரிதமாக கல்லூரிகள் விருப்பப் பதிவை செய்து முடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செப்டம்பர் 28-ல் வழங்கப்படும். மாணவர்கள் செப்.29-ம் தேதிக்குள் ஒப்புதல்அளிக்க வேண்டும். பின்னர்சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x