

ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரும், அரசு மருத்து வருமான மனோஜ்குமாரின் கார்க ளுக்கு தீ வைத்த இளைஞர் ஒரு வரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் உதவி நிலைய மருத்துவரும், பாஜக ஆதரவாளருமான மனோஜ்குமார் என்பவரது மருத்துவமனை ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் கடந்த 23-ம் தேதி இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவர் மனோஜ்குமாரின் 2 கார்களுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
உடனடியாக மருத்துவர் மனோஜ்குமார், மருத்துவமனை காவலாளி ஆகியோர் கார்களில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதனால் தீ விபத்தில் இருந்து கார்கள் தப்பின.
கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இவ்வழக்கில் ராமநா தபுரம் கேணிக்கரையைச் சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல்ஹக்கீம்(32) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.