

சென்னை அருகே உள்ள திருமழிசை துணைநகரத்தில் 138 ஏக்கரில் சுமார் 9,700 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்னை அருகே திருமழிசையில் துணைநகரம் அமைக்கும் பணியில் முதல்கட்டமாக குத்தம் பாக்கம் பகுதியில் 138 ஏக்கர் நிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய சுமார் 9,700 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் இரண்டு மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
மீதமுள்ள சுமார் 173.05 ஏக்கரில் இரண்டாம் கட்டமாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு தேவையான தனியார் நிலங்களை பெறுவதற்கும், நில எடுப்பு வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.