பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஆவணத்தை உறுதிப்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு

பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஆவணத்தை உறுதிப்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு

Published on

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு.ஷபி அஹமது வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எம்.கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், 12-வதுதவணை தொகையை பெறுவதற்கு வரும் 30-ம் தேதிக்குள் நில ஆவணங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

இதன் அடிப்படையில், விவசாயிகளின் நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி கிராமவாரியாக அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடக்கிறது.

பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்றுவரும் விவசாயிகளில் இதுவரை 6,572 பேர் தங்களது நில ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யவில்லை.

எனவே, நில உரிமையை உறுதி செய்திட பட்டா, சிட்டா, ஆதார் நகல்களுடன் தங்களது வட்டார உதவி வேளாண்மை அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அல்லது உதவி வேளாண் வணிகம், விற்பனை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணம் பதிவேற்றம் செய்யப்பட்டதை விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in