

மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் நவ.28-ல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதயநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து நவ. 28-ல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.