

நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 82 ஆயிரம் பேருக்கு திறன்சார் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு துறைக்கு (ஐஈசிடி) 5 உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் ஐஈசிடி துறை, பள்ளி- பல்கலைக் கழகம்- தொழில் நிறுவனங்கள் என்ற இணைவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், பள்ளிகளில் படிக்கும் போதே மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகம் நடத்தும் கம்ப்யூட்டர் பேசிக்ஸ், ஆபீஸ் ஆட்டோமேஷன், புரோகிராமிங் டெக்னிக்ஸ், கிராபிக் டிசைன், சி புரோகிராமிங், வெப் டிசைனிங், சி++ புரோகிராமிங், 2 டி அனிமேஷன் ஆகிய 8 கணினி சான்றிதழ் பயிற்சிகளைப் பெற்று, ஐஈசிடி நடத்தும் தேர்வை எழுதி, அதன்மூலம் பல்கலைக்கழக சான்றிதழ் பெறுவதே இத்திட்டத் தின் நோக்கம். அதன்படி, நடப்பு கல்வி யாண்டில் 8 பயிற்சிகளிலும் 82,812 பேர் பயிற்சியில் சேர்ந்துள் ளனர். ஒரு பிரிவில் இத்தனை பேர் பயிற்சியில் சேர்ந்துள்ளது உலக சாதனையாகக் கருதப்பட்டு, நேற்று நடைபெற்ற விழாவில் 5 உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
லண்டன் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் நடுவர் கார்த்திகேயன் ஜவஹர், யூனிக் வேர்ல்ட் ரெக் கார்ட்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் சபாபி மங்கள், ஏசியன் ரெக்கார்ட் அகாதெமி நடுவர் செந்தில்குமார், இந்திய ரெக்கார்ட்ஸ் அகாத மெயின் மேலாளர் ஜெகநாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேலாளர் ராஜ் கிருஷ்ணா ஆகி யோர், ஐஈசிடியின் சாதனைகளை அங்கீகரித்து அறிவித்து, பாரதி தாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் விஎம்.முத்துக்குமார், ஐஈசிடி தலைவர் பார்த்தசாரதி ஆகியோரிடம் உலக சாதனை சான்றிதழ்களை வழங்கினர்.