

அரசு ஐடிஐ-யில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) அலுவலக உதவியாளர் பணி ஒன்று காலியாக உள்ளது. இக்காலியிடம் நேர்காணல் மூலம் நிரப்பப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பதாரருக்கு சைக்கிள் ஓட்டத் தெரிய வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை (மகளிர் வளாகம்) நேரிலோ அல்லது 044-22504990 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு விண்ணப்பத்தை டிசம்பர் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.