

சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயல ராக பதவி வகித்த ஆர்.எம்.டி. டீக்காராமன், உயர் நீதிமன்ற தலை மைப் பதிவாளராக இருந்த என்.சதீஷ்குமார், சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.சேஷ சாயி ஆகிய 3 பேரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரும் இன்று பதவியேற்கின்ற னர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போது பதவியேற்கும் 3 பேரையும் சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிக்கிறது.
நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன்:
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 1963 ஜூன் 9-ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் ஆர்.எம்.திருவேங்கடம் - டி.மீனாட்சி. வேலூர் ஊரீசு கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், சென்னை சட்டக்கல்லூரி யில் 1988-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய் தார். 2005-ல் மாவட்ட நீதிபதியாக தேர்வான இவர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, திருவண்ணா மலை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயல ராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு மனைவி பேராசிரியர் மஞ்சுளா ராமன், மகள்கள் சாதனா ராமன், மயூரி உள்ளனர்.
நீதிபதி என்.சதீஷ்குமார்:
ஊட்டியில் 1967 மே 6-ல் பிறந்தார். பெற்றோர் நாகராஜ் - யசோதா. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பையும், கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். 1992-ல் வழக்கறிஞராக பதிவு செய்த இவர், 2005-ல் வேலூர் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். 2014-ல் தமிழ்நாடு நீதித்துறை அகாடமி யின் இயக்குநராக பதவி வகித் தார். கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். இவரது மனைவி ராதாமணி, வழக்கறிஞ ராக பணிபுரிந்து வருகிறார். இவர் களுக்கு கிஷந்த்குமார், டினுபிரசாந்த் என்ற மகன்கள் உள்ளனர்.
நீதிபதி என்.சேஷசாயி:
நாகர் கோவிலில் 1963 ஜனவரி 8-ம் தேதி பிறந்தார். பெற்றோர் வி.நாராயண ஐயர் - ருக்மணி. இவரது தந்தை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட் டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து, 1986-ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் சிறிதுகாலம் வழக் கறிஞராக பணிபுரிந்துவிட்டு, 2005-ல் மாவட்ட நீதிபதியாக பதவி யேற்றார். செங்கல்பட்டு, திருநெல் வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதி யாக பணிபுரிந்த இவர், பின்னர் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது மனைவி பகவதி, மகன் முகுந்த் நாராயணன் உள்ளனர்.