பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டி இன்று தொடக்கம்

பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டி இன்று தொடக்கம்

Published on

பேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

திருப்பூர், தருமபுரி மாவட்டங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன.

எஞ்சிய மாவட்டங்களில் போட்டிகள் நவம்பர் 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 10-ம் தேதி முடிவடையும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித் துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in