தமிழக உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டது - இந்து முன்னணி இயக்கம்

தமிழக உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டது - இந்து முன்னணி இயக்கம்
Updated on
1 min read

இந்து முன்னணி இயக்கத்தின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 22-ம் தேதி என்ஐஏ நாடு முழுவதும் சோதனை நடத்தி பலரை கைது செய்தது. ஜனநாயக நாட்டில் சோதனையின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றமில்லை எனில் பின்னர் அவர்கள் விடுதலையாவார்கள். இதுதான் நடைமுறை. நம் நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆனால், அறவழியில் போராடாமல் பெட்ரோல் குண்டு வீசுவது, இந்து அமைப்பு நிர்வாகிகளின் வாகனங்களுக்கு தீ வைப்பது, வீடுகளை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இது எந்த விதத்தில் நியாயம். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களையும், அரசையும் அச்சுறுத்தப் பார்க்கின்றனரா?. தமிழகத்தில் இத்தகைய சம்பவங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து தடுக்காத தமிழக உளவுத்துறை முழு தோல்வியடைந்துள்ளது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். தமிழக அரசு உடனடியாக சமூகவிரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in