

கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மு.கிருட்டிணசாமி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மாமன்றத்தின் தீர்மானம் இல்லாமல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குப்பை வரியைமாநகராட்சி கட்டாய வசூல் செய்கிறது.
சூயஸ் நிறுவனம் குடிநீர் வரியை பொதுமக்களுக்கு தெரிவிக்காமலேயே பல மடங்குஉயர்த்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் 80 சதவீத சாலைகள் வாகனம் ஓட்ட தகுதியற்றதாக உள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துதர முயற்சிக்காமல் வரி உயர்வு மட்டுமே தங்களின் பணி என மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.