விழுப்புரம் மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தலில் பொன்முடி பாணியிலேயே பதவியை கைப்பற்றும் கவுதம சிகாமணி

விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி எம்எல்ஏ சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அருகில் அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி எம்பி உள்ளிட்டோர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி எம்எல்ஏ சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அருகில் அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி எம்பி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

விழுப்பும் மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தலில், பொன்முடி பாணியிலேயே அவரது மகன் பயணிப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, ”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் படும்” என்றார்.

அப்போது, இதற்கு பதிலளித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ”முதலில் திமுகவில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும். பின்னர் உள்ஒதுக்கீடு பற்றி பேசலாம்” என்றார்.

அதன் அடிப்படையில் விழுப் புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக, விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியை நியமித்த திமுக தலைமை, பொன்முடிக்கு மாநிலதுணைப்பொதுச் செயலாளர் பதவியை வழங்கியது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விழுப் புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு புகழேந்தி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவருடன்அமைச்சர் பொன்முடி, கள்ளக் குறிச்சி எம்பி கவுதம சிகாமணி, மாவட்ட அவைத் தலைவர் ஜெய சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது குறித்து திமுக நிர்வாகிக ளிடம் கேட்டபோது, "மீண்டும் மாவட்ட செயலாளராக புகழேந்தி யும், இதுவரை கட்சி பொறுப்பில் இல்லாத கள்ளக்குறிச்சி எம்பி கவுதமசிகாமணி, திருக்கோவிலூர் செல்வராஜ், வானூர் பாஸ்கர், விக்கிரவாண்டி அப்துல் சலாம் ஆகியோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆரம்பத்தில் பொன்முடி திமுக உறுப்பினராகவும், திராவிட கழக பேச்சாளராகவும் இருந்தார்.

அப்போது விழுப்புரம் தொகுதியில் நிலவிய உட்கட்சி பூசலால்அவர் விழுப்புரம் தொகுதிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். பின்னர் அவர் வெற்றி பெற்றதும் சுகாதாரத்துறை அமைச்சரானார்.

அதன் பின் திமுகவில் விவசாய அணியின் மாநில செயலாளரானார். அதே வழியில், எவ்வித கட்சி பொறுப்பும் இல்லாத அவரது மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளார். இப்பதவி ஏற்கெனவே முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் வசம் இருந்தது. அவர் மீண்டும் மாவட்ட பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளதால், அப்பதவி கவுதமசிகாமணி எம்பிக்கு வழங்கப்பட உள்ளது.

இதனால் பொன்முடி பாணியில்அவரது மகன் கவுதம சிகாமணியும் பயணிக்கிறார்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in