டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடக்கிறது: 5,451 காலி பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடக்கிறது: 5,451 காலி பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் போட்டி
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக் கிறது. தமிழகம் முழுவதும் 301 மையங்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுது கிறார்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத் தப்படுகிறது. அனைத்து மாவட் டங்களிலும் தேர்வு மையங்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய் துள்ளது. மாநிலம் முழுவதும் 301 மையங்களில் 15 லட்சம் பேர் தேர்வெழுதுகிறார்கள்.

காலை 10 முதல் 1 மணி வரை

சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்து கொள்கிறார்கள். எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

குரூப்-4 தேர்வுக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொறி யியல் பட்டதாரிகளும் அடங்குவர். குரூப்-4 தேர்வுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அரசு பணி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் கட்டுப்பாடுகள்

இதற்கிடையே, தேர்வை யொட்டி விண்ணப்பதாரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை கண்டிப்பாக உடன் எடுத்துவர வேண்டும். தேர்வுக்கூடத்துக்குள் நுழையும் போதும், அறைக் கண்காணிப்பாளர் கேட்கும்போதும் நுழைவுச்சீட்டைக் காண்பிக்க வேண்டும்.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கூட வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். உடன் வரும் பெற்றோர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் விண்ணப்பதாரர் தேர்வுக்கூடத்துக்குள் எடுத்து வரவோ, வைத்திருக்கவோ கண் டிப்பாக அனுமதி கிடையாது. மீறி தேர்வுக்கூடத்தினுள் எந்த தேர்வரேனும் வைத்திருப்பது தெரிய வரும்பட்சத்தில் கடுமை யான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

தேர்வு மையத்தையோ, தேர்வுக் கூடத்தையோ மாற்றவோ, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப் பட்டுள்ள விருப்பப்பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை.

தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in