கல்வராயன்மலையில் சாராய பாக்கெட்டுடன் பள்ளிக்கு வந்த மாணவர்

கல்வராயன்மலையில் சாராய பாக்கெட்டுடன் பள்ளிக்கு வந்த மாணவர்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள சேராப்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவர், 3 தினங்களுக்கு முன் மயக்க நிலையில் தள்ளாடிக் கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

அப்போது அவரை உட்கார வைத்த ஆசிரியர்கள், அந்த மாணவரின் பையை சோதனையிட்டனர். அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. சக மாணவர்களுடன் இணைந்து சாராயம் குடிக்க அந்த மாணவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவரின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், “உங்கள் மகனால் சக மாணவர்களும் கெட்டுப்போகும் சூழல் உள்ளது. இதனால் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் சென்று விடுங்கள்” என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து மாணவனின் மாற்றுச் சான்றிதழில், நன்னடத்தையில் ‘அதிருப்தி’ என குறிப்பிட்டுள்ளனர். இதனால், அந்த மாணவரின் பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, நன்னடத்தையில் ‘திருப்தி’ எனக் குறிப்பிட்டு, மாற்றுச் சான்றிதழ் வழங்கி, மாணவரை வெளியேற்றினர். கள்ளச்சாராய உற்பத்தி செய்யப்படும் கல்வராயன் மலையில், பள்ளி மாணவர்களிடமும் கள்ளச் சாராயம் பரவி வருவது ஆசிரியர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in