Published : 25 Sep 2022 04:55 AM
Last Updated : 25 Sep 2022 04:55 AM

தி.மலையில் இந்து அமைப்பு நிர்வாகிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: காவல் துறை அறிவுறுத்துதாக தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பு நிர்வாகிகளை எச்சரிக்கையாக இருக் குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளன.

இந்துக்கள் குறித்து திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தெரிவித்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பு கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது. இவர் களுக்கு எதிராகவும், ஆ.ராசாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரியார் ஆதரவு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மீது கடந்த 3 நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது.

இதன்மூலம், அவர்களது வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் சேதப் படுத்தப்படுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்களில் முக்கியமானவர்களை தொடர்பு கொண்டு, எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது. நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருவதால், என்னை போன்ற நிர்வாகிகளை காவல் துறையினர் தொடர்பு கொண்டு எச்சரிக்கையாக இருக்கு மாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது தனியாக செல்ல வேண்டாம், நாங்கள் செல்லும் இடம் குறித்து முன் கூட்டியே தெரிவித்தால் பாதுகாப்பு வழங்கப்படும், சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும், வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்திருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு எச்சரிக்கையாக இருக்கு மாறு அறிவுறுத்தி வருகிறோம்.

அவர்களுக்கும், அவர்களது வீட்டுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களது வீடு அமைந்துள்ள பகுதிகளை கண்காணித்து வருகிறோம். சந்தேகிக்கும் நபர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். திரு வண்ணாமலை மாவட்டத்தில் அசம் பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல் துறை எடுத்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x