"மதுரை எய்ம்ஸில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன" - நட்டாவை கிண்டலடித்த ப.சிதம்பரம்

கோப்புப்படம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
கோப்புப்படம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
Updated on
1 min read

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம், மருந்தகம் செயல்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கலாமே? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவப் பணிகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசியது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?" இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in