Published : 24 Sep 2022 06:39 AM
Last Updated : 24 Sep 2022 06:39 AM
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில்தத்தெடுக்கப்பட்ட காண்டாமிருகங்களுடன் உலக காண்டாமிருக நாளை இந்தியன் ஆயில் நிறுவனம் கொண்டாடியது. சுற்றுச்சூழல் சமன்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மக்களுக்குத் தரமான வாழ்க்கைச் சூழலைத்தர வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், இந்தியன் ஆயில்நிறுவனம் பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உலக காண்டாமிருக தினத்தையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப்படுத்துதல்) வி.சதீஷ் குமார் கலந்துகொண்டு, பார்வையாளர்களுக்குக் காண்டாமிருக பாதுகாப்பு தொடர்பான கையேடுகளை வழங்கினார்.
காண்டாமிருகங்கள் வசிக்கும் பகுதியை நன்கு பராமரித்து வரும்ஊழியர்களுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். உலகில் அருகி வரும் இனமான ஒற்றைக்கொம்பு காண்டா மிருகத்தைக் கடந்த ஆண்டு முதல் இந்தியன் ஆயில் நிறுவனம் தத்தெடுத்ததன் மூலம் தாங்கள் மேற்கொள்ளும் நல்லெண்ண நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினார்.
உலக காண்டாமிருக தினத்தையொட்டி, இந்தியன் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா, இந்தியன் ஆயில் நிறுவனம் தனது விற்பனையுடன், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்தல் ஆகிய பொறுப்புகளைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT