Published : 24 Sep 2022 06:02 AM
Last Updated : 24 Sep 2022 06:02 AM

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 2 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு: மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

2 பச்சிளங் குழந்தைகளை பறிகொடுத்த அருண், புவனேஸ்வரி.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தன. திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி அருண்(28). இவரது மனைவி புவனேஸ்வரி (24). கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.

பிறந்த இரண்டு பெண் குழந்தை களும் எடை குறைவாக இருந் ததால், குறைந்தது ஒரு மாதம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 பெண் பச்சிளங் குழந்தைகளும் மருத்துவ கண்காணிப் பில் பராமரிக்கபட்டது. சில நாட்கள் கழித்து 2 குழந்தை களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைகளுக்கும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த அருண் தனது 2 குழந்தைகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.

பச்சிளங் குழந்தை வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டன. அதில், ஒரு குழந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பும், மற்றொரு குழந்தை நேற்று முன்தினம் இரவும் உயிரிழந்தன. இது குறித்து கட்டிடத் தொழி லாளி அருண் கூறும்போது, ‘‘ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளங் குழந்தைகளும் எடை குறைவாக இருப்பதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் பராமரிப்பில் இருக்க வேண்டும் என கூறினர்.

மேலும், அரசு மருத்துவர் ஒருவர் தனக்கு சொந்தமாக கிளீனிக் இருப்பதாகவும், அங்கு சென்று குழந்தைகளின் எடையளவு அதிகரிக்க சத்து மாத்திரைகளை வாங்கி வருமாறு கூறினார். அவர் கேட்கும் மருந்து, மாத்திரைகளை நாங்கள் பணம் கொடுத்து வாங்கி கொடுத்தோம். ரூ.30 ஆயிரம் வரை மருந்து, மாத்திரைக்காக செலவு செய்துள்ளோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. ஒரே பிரசவத்தில் பிறந்த 2 பச்சிளங் குழந்தை களும் உயிரிழந்தது வேதனை யளிக்கிறது.

இங்கு மருந்து பற்றாக்குறை இருப்பதாக கூறும் மருத்து வர்கள் அவர்கள் சொந்தமாக நடத்தும் கிளீனிக் மற்றும் மருந்த கங்களுக்கு சென்று மருந்துகளை வாங்கி வரச்சொல்கிறார்கள். வசதி யில்லாத நாங்கள் என்னதான் செய்வது என்றே தெரியவில்லை. எனது 2 பச்சிளங் குழந்தைகளின் உயிரிழப்புக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம்’’ என்றார்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து கூறும்போது, ‘‘அருண், புவனேஸ் வரி தம்பதியர்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை 900 கிராமும், மற்றொரு குழந்தை ஒரு கிலோ 5 கிராம் எடையில் பிறந்தது. இதனால் மருத்துவர்களின் ஆலோசனை படி பிறந்த இரட்டை குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தோம். குழந்தைகளில் சிகிச்சையில் முன்னேற்றம் காணப்பட்டதால், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெற்றோரிடம் 2 குழந்தைகளும் நல்ல முறையில் ஒப்படைக்கப் பட்டன. இந்நிலையில், 2 குழந்தை களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறி மீண்டும் மருத்து வமனைக்கு கொண்டு வந்தனர்.

நாங்களும் உயர் தர சிகிச்சை அளித்தோம். இருந்தாலும், சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தன. அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது புவனேஸ்வரிக்கு மூன் றாவது பிரசவம். மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் ஒரு குழந்தை எடை குறைவு காரணமாக ஏற்கெனவே உயிரிழந்தது. கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் இது போன்ற குறைகள் நிகழ வாய்ப் புள்ளது.

மேலும், 2 பச்சிளங் குழந்தை களை வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிறகு தனிப்பட்ட வகைகளில் ஏதேதோ குழந்தைகளுக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதனால், குழந்தை களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம். இங்கு சிகிச்சை பெற வருபவர்களை வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி வர மருத்துவர்கள் யாரும் கட்டாயப் படுத்துவதில்லை. இருப்பினும், 2 பச்சிளங் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து பணியில் இருந்த மருத்துவர்களிடம் விசாரித்து வருகிறோம். உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x