டிடிவி தினகரன் | கோப்புப் படம்
டிடிவி தினகரன் | கோப்புப் படம்

மக்களை நேரடியாக பாதிக்கும் மின்கட்டண உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்

Published on

சென்னை: மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய திமுக அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

தமிழக மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து திமுக அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.

இது தான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ?" என்று தினகரன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in