ஆ.ராசா பேசியதை கண்டித்து பாஜக செப்.26-ல் சிறை நிரப்பும் போராட்டம்

ஆ.ராசா பேசியதை கண்டித்து பாஜக செப்.26-ல் சிறை நிரப்பும் போராட்டம்
Updated on
1 min read

சென்னை: ஆ.ராசாவின் அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விவகாரத்தில் பாஜகவினர் கைது செய்யப்படுவதை கண்டித்தும் வரும் 26-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழரின் மாண்பு, மரபு, தொன்மை, இறை நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. தமிழ் இனத்தை, தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் ஆ.ராசா போன்ற ஆளும்கட்சி நபர்களைகண்டுகொள்ளாத காவல் துறை, ஜனநாயகரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்பாஜகவினரை பொய் வழக்கில் கைது செய்கிறது. தாய்க்குலத்தை பழித்து, தமிழ் சகோதரிகளை இழிவுபடுத்தி ஆ.ராசா பேசியதற்குநீதி கேட்டு, கோவை மாவட்டத்தில் புதிய வேகத்துடன், புதிய எழுச்சியுடன் வரும் 26-ம் தேதிஅறவழியில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in