Published : 03 Jul 2014 09:00 AM
Last Updated : 03 Jul 2014 09:00 AM

தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: ஜூலை 10-ம் தேதி வரை அமல்

தருமபுரி மாவட்டம் முழுவ தும் 144 தடையுத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங் கோவன் மகன் இளவரசன் என்பவ ரின் நினைவு நாள் ஜூலை 4-ம் தேதி வரவுள்ளது. அதில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் சாதிச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வரவுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் இரு சமூகத்தி னருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக இரு தரப்புக் கும் இடையில் இன்னும் மனக் கசப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் இளவசரன் நினைவு தினத்தன்று அரசியல் மற்றும் சாதிச்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றால் அவர்களின் பேச்சு மற்றும் பிற நிகழ்வுகளால் மீண்டும் சாதிப்பிரச்சினை மற்றும் வன்முறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடவும் வாய்ப்பு உள்ளது.

இதனால் ஏற்கெனவே தருமபுரி வட்டத்துக்கு மட்டும் ஜூலை 8-ம் தேதி வரையில் இருவார காலம் 144 தடையுத்தரவை தரும புரி கோட்டாட்சியர் அறிவித் துள்ளார். இந்நிலையில் மேற் குறிப்பிட்ட காரணங்களால் இந்த தடையுத்தரவை அவர் பென்னா கரம் மற்றும் பாலக்கோடு வட்டங் களுக்கும் விரிவுபடுத்தி ஆணை யிட்டுள்ளார். அருகில் உள்ள அரூர் வட்டத்திலும் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக அரூர் கோட்டாட்சியர் 144 தடையுத்தரவை அறிவித்துள்ளார். மேலும் இந்த தடை ஜூலை 10-ம் தேதி வரை மாவட்டம் முழுவதிலும் அமலில் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு

இதனிடையே இளவரசன் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரிக்கு வரவிருக் கும் திருமாவளவனுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடு தலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கள் நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x