Published : 23 Sep 2022 04:05 AM
Last Updated : 23 Sep 2022 04:05 AM

வரும் மாதங்களில் சின்னவெங்காயம் விலை உயரும்: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை

தரமான சின்ன வெங்காயத்துக்கு பண்ணை விலை கிலோ ரூ.45 முதல் ரூ.50 ஆக இருக்கும்என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலை. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்விலை முன்னறிவிப்புத் திட்டமானது, சின்ன வெங்காயத்துக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின்90 சதவீத சின்ன வெங்காயம்தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.சின்ன வெங்காயம் பயிரிடுவதிலும், வியாபாரம் செய்வதிலும் தமிழகத்துக்கு கர்நாடகா முக்கியபோட்டியாளராக உள்ளது.

தற்போது கோவை சந்தைக்கு சின்ன வெங்காயம் கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகிறது.

மேலும், வர்த்தக மூலங்களின்படி, புரட்டாசி பட்ட விதைப்புக்கான தேவை மற்றும் வரும் மாதங்களில் பண்டிகை தேவை அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலை ஏற்றத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் சந்தையில் நிலவியசின்ன வெங்காயம் விலை மற்றும்சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் வரும் அக்டோபர் மாதம் இறுதிவரை தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகாவிலிருந்து வரும் வரத்து மற்றும் பருவமழையை பொறுத்து, சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும். மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x