Published : 17 Nov 2016 07:36 PM
Last Updated : 17 Nov 2016 07:36 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு

சென்னையில் வியாழக்கிழமை தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.22 ஆயிரத்து 920க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதேபோல், நாடுமுழுவதும் ரூ.500,1000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்று வரும் நிலையில், தங்கம் வாங்கும் திறன் குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.22 ஆயிரத்து 920க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 865க்கு விற்கப்பட்டது. இதுவே, புதன்கிழமை ரூ.2 ஆயிரத்து 877க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x