

தமிழகத்தில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்புக்கும் போலீஸார் அனுமதி வழங்கக் கூடாது என 4.12.2015-ல் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஷாகுல் அமீது என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய் தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஜெ.நிஷா பானு அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனி நீதிபதி தனது உத்தரவின் 16-வது பாராவில், தமிழகத்தில் 2016-ம் ஆண்டு முதல் வருங்காலத்தில் டிசம்பர் 6-ம் தேதி போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த எந்தவொரு அமைப்புக்கும் அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக உள் துறை செயலாளரும், டிஜிபி யும் தங்களது கீழ்நிலை அதிகாரி களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு ரத்து செய்யப்படு கிறது.
மனுதாரரின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது. மனுதாரர் அமைப்பு சார்பில் வரும் டிசம்பர் 6-ல் போராட்டம் நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை போலீஸார் சட்டப்படி பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அனுமதி வழங்கும்பட்சத்தில் பொது அமைதி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும், போக்கு வரத்துக்கு இடையூறு இல்லா மலும் போராட்டம் நடத்த வேண் டும்.
போராட்டங்களுக்கு அனுமதி பெறும் அமைப்புகள் நாட்டின் நலன், மத நல்லிணக்கம் ஆகிய வற்றை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறுவோர் மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று நிபந்தனைகளை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.