Published : 06 Nov 2016 11:10 AM
Last Updated : 06 Nov 2016 11:10 AM

தேமுதிக ஆதரவு கோரினால் பரிசீலனை செய்வோம்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் தகவல்

தேர்தலில் தேமுதிக ஆதரவு கோரினால் பரிசீலனை செய்யப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

தருமபுரியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய திட்டங்கள்

உணவு பாதுகாப்பு சட்டம், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட புதிய திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது போன்ற திட்டங்களை அமலாக்கும் முன்பு மாநிலங்களின் கருத்தும், ஒப்புதலும் அவசியம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒப்புதல் பெற நினைப்பது தவறு. இந்த விவ காரத்தில் தமிழக அரசின் நிலைப் பாடு என்ன என்பதை வெளிப் படையாக அறிவிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பு 2013-ம் ஆண்டு அரசிதழில் வெளியானது. அரசி தழில் வெளியானால் அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாகவே பொருள். ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு முன்வர வில்லை.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டு களாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர்.

ஊரக வேலை உறுதித் திட்டத் தின் நாட்களையும் ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும். கரும்புக் ஆண்டுதோறும் உயர்த்த வேண் டிய விலையை இந்த ஆண்டுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் நடந்த அநாகரிக செயல்களால்தான் தேர்தல் ரத்தானது. இதில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் இந்தத் தேர்தலில் ஜனநாயகம் இருக்காது என்று கருதி எங்கள் கட்சி போட்டியிடவில்லை. அதேநேரம், தேர்தலில் போட்டியிடும் தேமுதிக எங்கள் ஆதரவை கோரினால் பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x