தமிழகம்
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது உதவி மேலாளர் பதவியில் 1000 காலியிடங்களை நிரப்ப இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஐடிபிஐ வங்கியில் 1000 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் இப்பணி குறித்து விரிவான விளம்பரம் மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய www.idbi.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இப்பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 9'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
