சசிகலா உறவினர் ராவணன் காலமானார்

சசிகலா உறவினர் ராவணன் காலமானார்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள ராதாநரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் ராவணன்(64). சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகனான இவர், கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார்.

இவரது மகன் அரவிந்த் திருச்சி இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று வருகிறார். எனவே, தனது மகனுடன் திருச்சியில் தங்கியிருந்த ராவணனுக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று (செப்.22) இவரது சொந்த ஊரான ராதாநரசிம்மபுரத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, கொங்கு மண்டலத்தில் அதிமுக நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி தாரா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in