

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சொக்காநல்லூர் கிராமத்தில் நேற்று நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், 543 பேருக்கு ரூ.2,12,910 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே சொக்காநல்லூர் கிராமத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், சுகாதாரத் துறை, தோட்டக்கலைத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, 90 பேருக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, 121 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 100 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 10 பேருக்கு இந்து - இருளர் பழங்குடியினர் சான்றிதழ், 9 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி உட்பட 543 பேருக்கு ரூ.2,12, 910 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுகந்தி மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.