

இந்து சமய அறநெறிகளில் ஆழமான அறிவு. இறைத் தத்துவங்களை மேடையில் பிரச்சாரம் செய்யும்போது தெளிவு. `உதவி’ என்று வருபவர்களிடம் தட்டிக்கழிக்காமல் அவர்களின் மேல் காட்டும் பரிவு… இவைதான் கும்பகோணம், திருவிடைமருதூர் அருகிலிருக்கும் அம்மன்குடி வெ.சீனிவாச பட்டாச்சார் புகழை நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பரப்பிக் கொண்டிருக் கின்றது.
சிறுவயதிலேயே வேத ஆகம சாஸ்திரங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார் சீனிவாச பட்டாச் சார். அதன்பின், உப்பிலியப்பன் கோயில், திருகோஷ்டியூர் போன்ற இந்தியாவின் புகழ்பெற்ற பல கோயில்களில் நடந்த கும்பாபிஷேக திருப் பணிகளில் பங்கேற்றார். கடல் கடந்தும் இவரின் ஆன்மிகச் சேவை விரிந்தி ருக்கிறது.
இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் கும்பாபிஷேக திருப் பணிகளின்போது ஆகம கைங்கர் யங்களை செய்து வந்திருக்கிறார்.
கடந்த 1994-ம் ஆண்டு லண்டனில் உள்ள மகாலட்சுமி கோயிலில் அர்ச்சகராக தெய்வப் பணியில் ஈடுபட்டார். அதன்பின், சிங்கப்பூர் இந்து அறநிலையத்துறையின் சீனிவாசப் பெருமாள் கோயிலின் தலைமை அர்ச்சகராக கடந்த 19 ஆண்டுகளாக ஆன்மிகப் பணி செய்துவருகிறார்.
சீனிவாச பட்டாச்சாரின் ஆன்மிகச் சேவையைப் பாராட்டி திருச்சி புத்தூர் சமஸ்கிருத பல் கலைக்கழகம் வழங்கிய `ஆகம ஆச்சார்யா’, லண்டன் மகாலட்சுமி கோயில் சார்பாக வழங்கப்பட்ட `ஆகம ரத்னாகரம்’, சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் இந்து அறக்கட்டளை வாரியம் சார்பாக சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம் வழங்கிய `ஆகம யஷோ பூஷணம்’, மலேசிய முருகன் கோயிலில் வழங்கப்பட்ட `சம்ரோக்ஷண சர்வசாதகர்’ ஆகிய பட்டங்களும் விருதுகளும் பரந்து விரிந்த பட்டாச்சாரின் ஆன்மிகச் சேவைக்கு கட்டியம் கூறுகின்றன.
சமீபத்தில் சீனிவாச பட்டாச்சா ரின் ஆன்மிகச் சேவையைப் பாராட்டி விஸ்டம் பல்கலைக்கழகம் சென்னை, ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
அன்பை விதைத்து இறைவனின் அருளை அறு வடை செய்வதே உண்மையான இறைத் தொண்டு. உதவி என்று நாடி வருபவருக்கு கல்வி கற்கவும் வாழ்வாதாரத்தைப் பெறவும் இயன்ற உதவி செய்வதும் ஆன்மிகவாதியின் கடமை என்று தன்னுடைய குடும்ப அறக்கட்டளை மூலம் நிரூபித்து வருகிறார் சீனிவாச பட்டாச்சார்.