

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் பூஜைகள் நடத்தப் பட்டதாக எழுந்த வதந்தியை கோயில் உதவி ஆணையர் மறுத்துள்ளார்.
தமிழகத்தின் மிகப் பழமையான வைணவத் தலங்களில் ஒன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப் பட்டு இரவு 10.30 மணிக்கு சாத்தப்படுகிறது.
இந்நிலையில், கோபுர வாயில் பெருங்கதவில் உள்ள சிறிய கதவு 23-ம் தேதி இரவு 11 மணிக்கு மேல் திறக்கப்பட்டதாகவும், ஆகம விதி களை மீறி கோயிலில் நள்ளிரவில் பூஜைகள் நடந்ததாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமியிடம் கேட்டபோது, ‘‘கோயிலில் நள்ளிர வில் பூஜைகள் எதுவும் நடக்க வில்லை. வரதர் சன்னதி எதிரே இருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், இரும்புக் கம்பிகள் போன்ற வற்றை அப்புறப்படுத்தும் பணி தான் நடந்தது. அவற்றை கிரேன் மூலம்தான் அப்புறப்படுத்த முடியும். பகலில் இப்பணி களை மேற்கொள்ள முடியாது என்பதால் இரவில் மேற் கொள்ளப்பட்டது. மற்றபடி, பூஜை நடந்ததாக கூறுவது தவ றான செய்தி. அதில் உண்மை இல்லை’’ என்றார்.