கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து

அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப் படம்
அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டது. அரசு வழிகாட்டு விதிமுறைகளை மீறவில்லை" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in