ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? - இணையத்தில் அறியும் எளிய வழி

ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? - இணையத்தில் அறியும் எளிய வழி
Updated on
1 min read

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 21, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் பெரும்பாலான பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்று இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://aoboa.co.in/BusFare/index என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in