Published : 03 Nov 2016 06:48 PM
Last Updated : 03 Nov 2016 06:48 PM

புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ரிசர்வ் வங்கி புதிய ரூ.1 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன் உட்பொதிந்த L எழுத்துடன் இருக்கும். புதிய ரூ.1 நோட்டின் நிறம் பெருவாரியாக முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிற கலவையிலும் இருக்கும்.

இது 9.7x 6.3 செ.மீ. அளவிலான இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் Government of India என்ற வார்த்தைகளுக்கு மேல் இருக்கும்.

இந்த நோட்டில் நிதித்துறை செயலர் ரத்தன் பி வட்டலின் இரு மொழி கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும். 2016 – ம் ஆண்டு வெளியிடப்பட்ட சத்தியமேவே ஜெயதே – ன் வரிசை எண்கள் பகுதியில் பெரிய எழுத்தில் உட்பொதிந்த L என்ற ஆங்கில எழுத்தும் இருக்கும். நோட்டின் வலது கீழ்ப்புறம் எண்கள் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

புதிய நோட்டின் பின்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் Government of India உடன் 2016 என்ற வார்த்தைக்கு மேல் இருக்கும். ரூபாய் நாணத்தின் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் H. குறியீட்டுடன் பூக்களுடன் கூடிய வடிவமைப்பு இருக்கும். அதைச் சுற்றி எண்ணெய்த் துரப்பண ஆராய்ச்சி மேடை வடிவமான சாகர் சாம்ராட்டின் படமும் இருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது 15 இந்திய மொழிகளில், மொழிகளுக்கான முகப்பில் காட்டப்பட்டிருக்கும். மேலும் மையப்பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும்.

புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்த பின்னரும் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x