அக்டோபரில் தொடங்கும் வட கிழக்கு பருவமழை: சென்னையில் கால்வாய்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

கால்வாய் சீரமைப்பு பணிகள்
கால்வாய் சீரமைப்பு பணிகள்
Updated on
1 min read

சென்னை: வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கால்வாய்களை சீரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்நிலையில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் கால்வாய்களை சீரமைக்க தமிழக அரசின் நீர் வளத்துறை ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி கீழ் பாலாறு கோட்டம், கொசஸ்தலையாறு கோட்டம், ஆரணியாறு கோட்டம், கிருஷ்ணா குடிநீர் திட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்களை சீரமைக்க கடந்த 13 ஆம் தேதி நீர்வளத்துறை சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in