Published : 21 Sep 2022 07:00 AM
Last Updated : 21 Sep 2022 07:00 AM

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்படத் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சி செல்லரூ.2,000, மதுரைக்கு ரூ.2,500,கோவைக்கு ரூ.2,350, திருநெல்வேலிக்கு ரூ.2,700, தூத்துக்குடிக்கு ரூ.2,500, நாகர்கோவிலுக்கு ரூ.4,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குளிர்சாதனமில்லா படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும்அமரும் வசதி கொண்ட பேருந்துகளிலும் வழக்கத்தைவிட 2 மடங்குகூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே இந்தக் கட்டணம் என்றால்,ஓரிரு நாட்களுக்கு முன் கட்டணம் மேலும் உயரும் என்றும், பண்டிகையின்போது தீராத பிரச்சினையாக இது உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும், பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x